பான் ஏசியா வங்கி சவாலான பேரின பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்ட பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 2022 ஆம் ஆண்டிற்கான அதன் சிறப்பு நிதி செயல்திறனை பதிவு செய்து சிறந்த முகாமைத்துவம் மற்றும் சொத்துத் தரத்தை நிர்வகிப்பதில் உள்ள திறனை வெளிக்காட்டியுள்ளது.
கொள்கை வீதங்களை அதிகரிக்கவும் மற்றும் சில கடன் தயாரிப்பு வட்டி வீதங்களின் வரம்புகளை நீக்கவும் இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளின் விளைவாக, சந்தைக் கடன் விகிதங்களின் அதிகரிப்பு மற்றும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப வசதிகளின் மறு விலை விளைவினால் வருடத்திற்கான வட்டி வருமானம் 42 வீதத்தால் அதிகரித்தது.
மேலும், அடகு முன்பணங்கள் மற்றும் காலக் கடன்களின் கணிசமான அளவு வளர்ச்சியும் வட்டி வருவாயை அதிகரிக்க வழிவகுத்தது.
இந்த ஆண்டில் 10 வீத வளர்ச்சியை வங்கி பதிவுசெய்ததற்கமைய 2022 டிசம்பர் 31 ஆம் திகதியின்படி வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூ. 208 பில்லியனாக இருந்தது.
முக்கியமாக ரூபாய் கருவூல உண்டியல்கள் மற்றும் கடன் புத்தகத்தின் விரிவாக்கத்தால் இந் நிலைமை அதிகரிக்கப்பட்டது.
மொத்தக் கடன்கள் மற்றும் முற்பண புத்தகம் 2மூ வளர்ச்சியைப் பதிவுசெய்ததோடு சில்லறை வணிகப் பிரிவின் முக்கிய பங்களிப்புகளுடன் ரூ.154 பில்லியனை எட்டியது.
வங்கியின் இலாபமானது அதிக கடன் இழப்புச் செலவுகள் மற்றும் கடன்கள் மற்றும் முற்பணங்கள் மீதான பரிமாற்ற இழப்புகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணயம் குறிப்பிடப்பட்ட நிதிக் கருவிகள் ஆகியவற்றால் அளவிடப்பட்டது.
நாட்டில் நிலவும் பாரிய பொருளாதார நிலைமைகள் காரணமாக ஏற்பட்ட கூடுதல் அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்திற் கொண்டு, வங்கி அதன் குறைபாடு மாதிரிகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தி மதிப்பாய்விற்கு உட்பட்ட ஆண்டில், கடன் இழப்புகளுக்கான அதன் வழங்கல் இடையகங்களை பொருத்தமான முறையில் விரிவுபடுத்தியது.
2022 ஆம் ஆண்டில் வங்கி நிகர வட்டி வரம்பு 4.707 என அறிவித்தது. இதற்கிடையில் வங்கி 10.587 பங்கு (ROE %) மற்றும் சொத்துக்கள் மீதான வரிக்குப் பிந்தைய வருமானம் 1.007 என்று அறிவித்தது.
ஆண்டுக்கான ஒரு பங்கின் வருவாய் (EPS) ரூ.4.52 முதல் ரூ.6.95 முக்கியமாக அதிகரித்த நிதி செலவுகள், பரிமாற்ற இழப்புகள் மற்றும் குறைபாடு கட்டணங்கள் காரணமாக ஒரு பங்குக்கான வங்கியின் நிகர சொத்து பெறுமதி 31 டிசம்பர் 2022 நிலவரப்படி ரூ.46.58 ஆகும்.
"கடந்த ஆண்டு நாங்கள் எதிர் கொண்டதை காட்டிலும் சூழ்நிலைகள் வியத்தகு முறையில் மாற்றமடைந்ததனால் இவ் ஆண்டு அளவை விட தரத்தை முன்னிலைப்படுத்தியுள்ளோம் என்பதற்கு எங்கள் செயல்திறன் ஒரு சான்றாகும்.
எங்களின் தற்போதைய போர்ட்ஃபோலியோவிலிருந்து வருமானத்தை ஈட்டுவதற்கு சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை நிர்வகிப்பதன் மூலமும் தே நேரத்தில் பணவீக்கத்திற்கு மத்தியில் செயல்பாட்டு செலவுகளை நெருக்கமாகக் கண்காணிப்பதன் மூலமுமே இந் நிலைமையை அடையமுடிந்தது” என வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்ஃபிரதம நிறைவேற்று அதிகாரி திரு.நிமல் திலகரத்ன தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM