வருடத்தின் அதிசிறந்த FIFA கால்பந்தாட்ட வீரர் லியனல் மெஸி

Published By: Digital Desk 5

28 Feb, 2023 | 09:29 AM
image

(என்.வீ.ஏ.)

2022ஆம் ஆண்டுக்கான உலகின் அதிசிறந்த FIFA கால்பந்தாட்ட வீரராக ஆர்ஜன்டீன அணித் தலைவரும் நட்சத்திர கால்பந்தாட்ட வீரருமான லியனல் மெஸி தெரிவானார்.

அதிசிறந்த FIFA கால்பந்தாட்ட விருது விழா ( The Best FIFA Football Awards™) பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் திங்கட்கிழமை (27) இரவு கோலாகலமாக நடைபெற்றது.

இவ் விருதுவிழாவின்போது அதிசிறந்த FIFA வீராங்கனைக்கான விருதை ஸ்பெய்ன் மற்றும் பார்சிலோனா கழகத்தின் மத்திய கள வீராங்கனை அலெக்சியா பியூடெல்லாஸ் சிகுரா வென்றெடுத்தார்.

இந்த விருது விழாவில் அதிசிறந்த வீரர், அதிசிறந்த கோல்காப்பாளர், அதிசிறந்த பயிற்றுநர் ஆகிய மூன்று பிரதான விருதுகள் ஆர்ஜன்டீனாவுக்கு கிடைத்தமை விசேட அம்சமாகும்.

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஆர்ஜன்டீனாவை உலக சம்பியனாக வழிநடத்தியமைக்காக லியனல் மெஸிக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.

ஆடவர்களில் அதிசிறந்த பீபா விருதுக்கான வாக்களிப்பில் பிரான்ஸ் வீரர்களான கிலியான் எம்பாப்பே, கரிம் பென்ஸிமா ஆகிய இருவரையும் விட அதிக வாக்குகளை வென்று இந்த மகத்தான விருதை லியனல் மெஸி தனதாக்கிக்கொண்டார்.

தேசிய அணிகளின் பயிற்றுநர்கள், அணித் தலைவர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நிபுணத்துவ ஊடகவியலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களால் இந்த விருதுக்கு வாக்களிக்கப்பட்டது.

லியனல் மெஸி இதற்கு முன்னர் FIFA விருதை 2019இல் முதல் தடவையாக வென்றிருந்தார்.

போர்த்துக்கல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போலந்தின் நட்சத்திர வீரர் ரொபர்ட் லெவண்டோவ்ஸ்கி ஆகியோருக்குப் பின்னர் 2 தடவைகள் FIFA விருதை வென்றெடுத்த மூன்றாவது வீரர் மெஸி ஆவார்.

கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மொத்தமாக 7 கோல்களைப் போட்ட மெஸி, பிரான்ஸுக்கு எதிரான மறக்கமுடியாத இறுதிப் போட்டியில் ஒரு கோல் போட்டு அசத்தியிருந்தார்.

அவரது அற்புதமான கால்பந்தாட்ட ஆற்றல் தங்கள் அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றியதாக ஆர்ஜன்டீன வீரர்களால் அடிக்கடி புகழாரம் சூடப்பட்டுவந்தது.

உலகக் கிண்ணப் போட்டியில் அதி சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதையும் மெஸி வென்றிருந்தார். பிரேஸில் 2014 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இந்த விருதை வென்ற மெஸி, 2 தடவைகள் இந்த விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் 98 கோல்களைப் போட்டுள்ள மெஸி, சிரேஷ்ட கழக மட்டப் போட்டிகளில் 492 கோல்களைப் போட்டுள்ளார்.

அதிசிறந்த FIFA வீராங்கனை


ஸ்பெய்ன் மற்றும் பார்சிலோனா கழகத்தின் மத்திய கள வீராங்கனை அலெக்சியா பியூடெல்லாஸ் சிகுரா, வருடத்தின் (2022) அதிசிறந்த FIFA கால்பந்தாட்ட வீராங்கனையாகத் தெரிவானார்.

அவர் இந்த விருதை இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக வென்றெடுத்தமை சிறப்பம்சமாகும்.

ஏனைய விருதுகள்


வருடத்தின் அதிசிறந்த FIFA ஆடவர் பயிற்றுநர்: லயனல் ஸ்காலோனி (ஆர்ஜன்டீனா).

வருடத்தின் அதிசிறந்த  FIFA   மகளிர் பயிற்றுநர்: சரினா வீஜ்மன் (இங்கிலாந்து)

வருடத்தின் அதிசிறந்த  FIFA  ஆடவர் கோல்காப்பாளர்: எமிலியானோ மார்ட்டினெஸ் (ஆர்ஜன்டீனா மற்றும் அஸ்டன் விலா).

வருடத்தின் அதிசிறந்த  FIFA   மகளிர் கோல்காப்பாளர்: மேரி இயர்ப்ஸ் (இங்கலாந்து மற்றும் மென்செஸ்டர் யுனைட்டட்).

வருடத்தின் மிகவும் அற்புதமான கோலைப் புகுத்திய வீரருக்கான  FIFA   புஸ்காஸ் விருது: மாசின் ஒலெஸ்கி (போலந்து மற்றும் வாட்டா பொஸ்னான் கழகம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35