தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான ஒரு வாரத்திற்குள் இந்திய மதிப்பில் 75 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அப்படத்தின் இயக்குநரான வெங்கி அட்லூரி தெரிவித்தார்.
தனுஷ் நடிப்பில் பதினேழாம் திகதியன்று வெளியான திரைப்படம் 'வாத்தி', பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியானது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றாலும் இந்த திரைப்படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது.
இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் வெற்றி விழாவிற்கான நிகழ்வில் இயக்குநர் வெங்கி அட்லூரி பங்குபற்றி பேசுகையில்,
'' தனுஷ் உடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம். படப்பிடிப்பு தளத்தில் நாம் எதிர்பார்க்காத வகையில் காட்சியில் நடித்து, சொல்ல நினைக்கும் விடயங்களை உயிர்ப்புள்ளதாக்கும் மாயஜாலம் தெரிந்த கலைஞர் தனுஷ்.
என்னுடைய கனவு படைப்பை அவர் அவரது பாணியில் மெருகேற்றி வெற்றியாக அளித்த போது அவரிடமிருந்து பல விடயங்களை கற்றுக் கொண்டேன்.
தற்போது நான் திறமையான தொழில்நுட்பக் கலைஞராகவும் மாற்றம் பெற்றிருக்கிறேன். இந்த கதையை நம்பிய தயாரிப்பாளருக்கும், இதனை தமிழில் விநியோகித்த லலித் குமாருக்கும் நன்றி. இந்தத் திரைப்படம் வெளியான 8 நாட்களில் 75 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.'' என்றார்.
இதனிடையே தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'திருச்சிற்றம்பலம்' தமிழில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM