நிதியை விடுவிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி தாக்கல் செய்த மனு வெள்ளியன்று பரிசீலனைக்கு

Published By: Vishnu

27 Feb, 2023 | 08:48 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்காக இவ்வாண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடுவிக்குமாறு திறைசேரிக்கு உத்தரவிடுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்துள்ள மனுவை வரும் வெள்ளியன்று (3) பரசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை , முன்னதாக தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட தினமான மார்ச் 9ஆம் திகதிக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரால் இந்த மனு இன்று (27) திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதற்கமையவே இதனை மீண்டும் மார்ச் 3ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19