ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக்கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் நடைபெறவுள்ளது. அதன்போது கட்சியின் உத்தியோகபூர்வ செயலாளர் விவகாரம் தொடர்பில் தீர்க்கமான முடிவுக்கு வரவுள்ளனர்.

மேலும் அக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.சி.ஹஸனலியும் கலந்துகொள்ளவுள்ளார். அதன்போது கட்சியின் பேராளர் மாநாடு தொடர்பில் ஆராயப்படவுள்ளதுடன் மாநாட்டை நடத்தும் திகதி மற்றும் இடமும் தீர்மானிக்கப்படவுள்ளன. மேலும் பேராளர் மாநாட்டில் முன்வைக்கவுள்ள யாப்புத் திருத்தம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

(எம்.சி.நஜிமுதீன்)