சன்குயிக் ரெடி டு டிறிங்க் தொழிற்சாலையினை உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு

Published By: Digital Desk 5

27 Feb, 2023 | 02:34 PM
image

சன்குயிக் லங்கா (பிரைவட்) லிமிடெட், மிகவும் விரும்பப்படும் சன்குயிக் பழங்கள் செறிவூட்டப்பட்ட, Sunquick BiBi ரெடி-டு-டிரிங்க் (RTD), அதன் வலுவான நிலையினை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், அதன் Sunquick RTDபான உற்பத்திக்காக நவீன தொழில்நுட்பங்களுடன் அமைந்த அதன் தொழிற்சாலையினை 2023 பெப்ரவரி 23 ஆம் திகதி ஹொரணையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தது. 

சிறப்பு நிகழ்வில் CO-RO A/S டென்மார்க், தலைவர் சோரன் ஹோல்ம் ஜென்சன் மற்றும் சன்குயிக் லங்கா தலைவர் திரு.ஹேமகா அமரசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர், மேலும் Sunquick Lanka மற்றும் CO-RO A/S டென்மார்க், ஊடகங்கள் மற்றும் நலன்விரும்பிகள் போன்ற சிறப்பு அழைப்பாளர்களின் வருகையையும் காண முடிந்தது.

சன்குயிக் புதிய தொழிற்சாலையின் உத்தியோகப்பூர்வ திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றிய CO-RO A/S தலைவர் சோரன் ஹோல்ம் ஜென்சன் “இந்த RTD உற்பத்தி வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம் சன்குயிக் லங்கா (பிரைவேட்) லிமிடெட் வளர்ச்சியின் புதிய கட்டத்திற்குள் நுழைகிறது. 

தனித்துவமான சுவை மற்றும் தரத்துடன், பல தசாப்தங்களாக குடும்பங்களையும் நண்பர்களையும் ஒன்றிணைக்கும் வியாபாரக்குறியாக Sunquick இருந்து வருகிறது. எங்கள் நுகர்வோருக்கு சிறந்ததை வழங்குவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான மேலும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக இதை கருதுகின்றோம்.”எனக் கூறினார்.

RTD டெட்ரா பேக் உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட, இது நுகர்வோருக்கு மிகவும் வசதியான பெக்கேஜிங் வடிவத்தை வழங்கும் நோக்கத்துடன் சன்குயிக்கின் சுவையை அனுபவிக்க அனுமதிக்கிறது. 

Sunquick BiBi ஆனது 200 மில்லிலீற்றர் மற்றும் 125 மில்லிலீற்றர் என்ற இரண்டு அளவுகளில், ஆரஞ்சு, பழங்களின் கலவை பானம், பெர்ரி கலந்த பழம் மற்றும் பிங்க் கொய்யா மற்றும் ஸ்றோபெரி ஆகிய நான்கு பழங்கள் நிறைந்த சுவைகளில் வருகிறது.

RTD உற்பத்தி நிலையமானது, தயாரிப்பு கோரும் கடுமையான ஸ்காண்டிநேவியன் தரநிலைகளுக்கு இணங்கக்கூடிய அதிநவீன இயந்திரங்களுடன் அமைந்துள்ளது. இங்கு Global QA குழுவின் தர உறுதிப் பணியாளர்கள் சர்வதேச தர நியமங்கள் ஒருபோதும் சமரசம் செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.

புதிய உற்பத்தி வசதி அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த சன்குயிக் லங்கா (பிரைவேட்) லிமிடெட் தலைவர் திரு. ஹேமகா அமரசூரிய, “புதிய தொழில்நுட்பத்துடன் அமைந்த எங்களது புதிய தொழிற்சாலை ஆனது உண்மையில் எமது குழுவின் கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தின் விளைவாக கிடைத்த ஒரு மைல்கல் சாதனையாகும். 

சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கடுமையான உலகளாவிய பாதுகாப்பு மற்றும் தர நிரணயங்களுக்கு இணங்க, புதிய தொழிற்சாலை திறனை மேம்படுத்தும். சன்குயிக் லங்கா (தனியார்) நிறுவனம் ஒரு ஏற்றுமதி மையமாக மாறியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன், இது நாட்டிற்கு மிகவும் தேவையான அந்நிய செலாவணியை உருவாக்குகிறது.” எனக் கூறினார்.

சன்குயிக் லங்கா தனது உற்பத்தி பலத்தை மேம்படுத்தி மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பதில் செயல் நிலையில் பங்கு வகிக்கிறது. Sunquick இலங்கையில் பழ ஸ்குவாஷ் பிரிவில் 70% சந்தைப் பங்கை வகிக்கின்றது. அதன் தயாரிப்புகளை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, பிஜி, மாலைத்தீவு, தாய்வான் மற்றும் பங்களாதேஷ் உட்பட பெரும்பாலான ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'சூர்யா'வுக்கான வர்த்தக நாமத் தூதுவராக இலங்கை...

2023-03-23 15:05:01
news-image

கடல் சுத்திகரிப்புத் திட்டத்தினூடாக தூய்மையான இலங்கையை...

2023-03-23 10:52:04
news-image

மக்கள் வங்கிக்கு சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள்...

2023-03-20 16:26:13
news-image

Daraz Express இனூடாக பெண் ஓட்டுநர்களின்...

2023-03-18 16:53:49
news-image

தனது நிலையான பயணத்தை தொடரும் அமானா...

2023-03-17 11:16:17
news-image

யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் வகையில்...

2023-03-15 17:19:59
news-image

மக்கள் வங்கியின் வனிதா வாசனா மூலமாக...

2023-03-07 11:16:52
news-image

கல்வி அமைச்சு மற்றும் Microsoft இணைந்து...

2023-03-07 11:46:52
news-image

வளர்ந்துவரும் இளம்தொழில் வல்லுநர்கள் நவீன மற்றும்...

2023-03-07 11:47:17
news-image

2022 ஆண்டிற்கான சிறந்த பெறுபேறுகளை பான்...

2023-02-28 11:36:32
news-image

சன்குயிக் ரெடி டு டிறிங்க் தொழிற்சாலையினை...

2023-02-27 14:34:37
news-image

"தைரியமான விளம்பர பிரசாரத்தின் மூலம் மாதவிடாய்...

2023-02-27 11:28:32