சுவீடன், பின்லாந்தின் நேட்டோ அங்கத்துவம் குறித்து மார்ச் 9 இல் பேச்சுவார்த்தை: துருக்கி அறிவிப்பு

Published By: Sethu

27 Feb, 2023 | 01:39 PM
image

சுவீடன் மற்றும் பின்லாந்தின் நேட்டோ அங்கத்துவ விண்ணப்பம் தொடர்பாக அவ்விரு நாடுகளுடன் மார்ச் 9 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக துருக்கி இன்று தெரிவித்துள்ளது.

இப்பேச்சுவார்த்தைகள் கடந்த ஜனவரி மாதம் நடைபெறவிருந்தன. எனினும், சுவீடனில் நடைபெற்ற இஸ்லாமிய எதிர்பபு ஆர்ப்பாட்டங்களைடுத்து, இப்பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது.

இந்நிலையில் மார்ச்9 ஆம் திகதி இப்பேச்சுவார்த்த்தைகள் நடத்தப்படுமு; என துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மேவ்லத் கவுசோக்லு தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் எல்லையிலுள்ள பின்லாந்தும் அதன் அயல் நாடான சுவீடனும் பல தசாப்தங்களாக இராணுவ அணி சேரா கொள்கையை கடைபிடித்து வந்தன. 

ஆனால், உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்த பின்னர், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைந்துகொள்ள அவ்விரு நாடுகளும் விண்ணப்பித்தன.

நேட்டோ அமைப்பில் புதிய அங்கத்தவர்கள் இணைவதற்கு, தற்போதைய 30 அங்கத்துவ நாடுகளினதும் அங்கீகாரத்தை பெற வேண்டும். 

எனினும், சுவீடன், பின்லாந்தின் விண்ணப்பங்களுக்கு துருக்கியும் ஹங்கேரியும் மாத்திரம் இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை. 

ஹங்கேரி அடுத்த மாதம்   இரு நாடுகளின் விண்ணப்பங்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கியைப் பொருத்தவரை பின்லாந்தின் முயற்சிக்கு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது. ஆனால், சுவீடனுக்கு அனுமதி வழங்க மறுத்து வந்தது

குர்திஷ் கிளர்ச்சிக் குழுக்கள் மற்றும் 2016 ஆம் ஆண்டில் தருக்கியில் நடந்த சதிப்புரட்சி முயற்சியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவர்களை சுவீடனிலிருந்து நாடு கடத்துவதற்கு சுவீடன் அரசு மறுத்து வருவதால் சுவீடனின் நேட்டோ அங்கத்துவ முற்சிக்கு ஆதரவு வழங்க துருக்கி மறுத்துவந்தது.

அண்மையில் துருக்கிக்கு விஜயம் செய்த நேட்டோ செயலாளர் நாயகம் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க், சுவீடன், பின்லாந்து ஆகிய இரு நாடுகளின் விண்ணப்பங்களையும் துருக்கி அங்கீகரிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என கடந்த 16 ஆம் திகதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59
news-image

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் -...

2024-04-15 11:34:42
news-image

மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து...

2024-04-14 13:19:17
news-image

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?...

2024-04-14 11:47:04
news-image

இஸ்ரேலிற்கு மரணம் - ஆயிரக்கணக்கான ஈரான்...

2024-04-14 10:03:46