பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவே பிரபலமற்ற கடுமையான தீர்மானங்களை எடுத்தேன் - ஜனாதிபதி

Published By: Digital Desk 5

27 Feb, 2023 | 03:45 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக பிரபலமற்ற கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டது. இதனால் சகலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நான் அறிவேன். எனினும் இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் கொழும்பு றோயல் கல்லூரி சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக பிரபலமற்ற கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டது. மேலதிக வரி செலுத்த வேண்டியேற்பட்டுள்ளமையால் எனது தீர்மானம் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அறிவேன். எவ்வாறிருப்பினும் அந்த தீர்மானங்களை எடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. அதனை தட்டிக்கழிக்க முடியாது.

றோயல் கல்லூரி மாணனான நான் தப்பிச் செல்லப் போவதில்லை. பொறுப்புகளிலிருந்து தப்பிச் செல்வதற்கு றோயல் கல்லூரி எனக்கு கற்றுக் கொடுக்கவில்லை. எனவே தான் நான் தீர்க்கமான முடிவினை எடுத்துள்ளேன். கிரேஸ் நாட்டுக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்பட நான் இடமளிக்கப் போவதில்லை.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ள கடனுதவியுடன் அடுத்த ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டுக்குள் சிறந்த பிரதிபலன்களைப் பெற்றுக் கொள்வதே எனது எதிர்பார்ப்பாகும் என்றார்.

மேலும் நாட்டின் சட்டத்துறைக்காக றோயல் கல்லூரி ஆற்றிய பங்களிப்பை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் உருவாகக்கூடிய புதிய சட்டத்துறைகள் குறித்தும் இளம் சட்டத்தரணிகளுக்கு எடுத்துரைத்தார். 

துறைமுக நகரத்தை நிதி மையமாக மாற்றுவது தொடர்பான சட்டத்துறை பிரவேசத்திற்காக இளம் சட்டத்தரணிகளை ஊக்குவித்த ஜனாதிபதி, பொறுப்புகள் மற்றும் தலைமைத்துவ பாத்திரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

கடல்சார் பொருளாதார சட்டத்தில் நிபுணத்துவத்தை பெறுமாறும் துறைமுக நகரத்தில் புதிய சட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்குமாறும் இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  வேண்டுகோள் விடுத்தார். 

புதிய துறைமுக நகரமானது கடல்சார் பொருளாதார சட்டத்துடன் கூடிய நிதி மையமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01