(எம்.வை.எம்.சியாம்)
கலேவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெவஹுவ நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காணாமல் போன நபர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்த சந்தர்ப்பத்தில் தெவஹுவ நீர்தேக்கத்திற்கு குளிக்க சென்றுள்ளார்கள். இவர்களில் மூவர் நீர்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர் ஒருவரின் படகில் ஏறி மீன்பிடிப்பதற்காக நீர்தேக்கத்தின் நடுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த படகு கவிழ்ந்து, அதில் பயணித்த மூவரில் இருவர் நீந்திக்கொண்டு கரையை வந்தடையதுள்ளதுடன் மற்றைய நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தம்புள்ள பொலிஸ் உயிர் காக்கும் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நீரில் மூழ்கி காணாமல் போனவரை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர். கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM