துருக்கியில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினால் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்தமை தொடர்பில், கட்டடங்களுக்குப் பொறுப்பான நிர்மாணத்துறையினருக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை துருக்கிய அதிகாரிகள் விஸ்தரித்துள்ளனர். இது தொடர்பில் 200 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்படுள்ளனர் என அந்நாட்டு நீதியமைச்சு தெரிவித்துள்ளது,
கடந்த 6 ஆம் திகதி துருக்கியின் தென் பகுதியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பத்தினால், துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50,000ஐ கடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வரை துருக்கியில் 44,218 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அனர்த்த மற்றும் அவசரநிலை முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேவேளை சிரியாவில் 5,914 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தரக்குறைவான கட்டட நிர்மாணங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக துருக்கிய அதிகாரிகள் குற்றவியல் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில், 626 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் பூகம்பத்தினால் உயிரிழந்துள்ளனர். ஏனையோர் தேடப்படுகுன்றனர் என துருக்கியின் நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே 200 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
பூகம்பத்தையடுத்து 11 மாகாணங்களில் 1,250,000 கட்டடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவற்றில் 520,000 வீடுகளை உள்ளடக்கிய 164,321 கட்டடங்கள் ஏற்கெனவே இடிந்துள்ளன அல்லது கடுமையாக சேதமடைந்துள்ளன என சுற்றாடல்துறை அமைச்சர் முராத் குரும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 270,000 வீடுகளை ஒரு வருடத்துக்குள் நிர்மாணிக்கப்படும் என துருக்கியின் ஜனாதிபதி தையீப் அர்துகான் தெரிவித்துள்ளார்.
2 இலட்சம் தொடர்மாடி குடியிருப்புகளையும், 70,000 கிராமிய வீடுகளையும் நிர்மாணிப்பதற்கு துருக்கிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக குறைந்தபட்சம் 15 பில்லியன் டொலர்கள் செலவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM