அடுத்த ஆண்டில் ஆட்சியை கைப்பற்றலாம் என  மஹிந்த ராஜபக்ஷ பகல் கனவு காண்கின்றார். தான் முன்னாள் ஜனாதிபதி என்பதையும் பாராளுமன்றில் அவர் ஒரு சாதாரண உறுப்பினர் என்பதை மறந்துவிட்டு தன்னை இன்னும் ஜனாதிபதியாகவே நினைத்துக்கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

Image result for டிலான் பெரேரா

நாட்டில் நடப்பது என்னவென்பது தெரியாத அவரது அறியாமையின் வெளிப்பாடு சர்வதேசம் வரையில் வெளிப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதே தனது இலக்கு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

(ஆர். யசி)