தெற்காசிய விளையாட்டு விழாவுக்காக பாதுகாப்பு உட்பட அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு இவ்விழாவில் பாகிஸ்தான் நிச்சயம் பங்கேற்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
12ஆவது தெற்காசிய விளையாட்டு விழா இந்தியாவின் அசாம் மாநிலத்தின் குவாஹாட்டி நகரிலும் ஷில்லொங் நகரிலும் நடைபெறவுள்ளது. அமைதி, முன்னேற்றம், வளம் ஆகியவற்றுக்காக விளையாடுவோம் என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இவ்விளையாட்டு விழாவானது அடுத்தாண்டு பெப்ரவரி 5ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
12ஆவது தெற்காசிய விளையாட்டு விழா தொடர்பில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக ஊடகவியலாளர் சந்திப்
பொன்று நேற்று முற்பகல்
விளையாட்டுத்துறை அமைச் சில் நடைபெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் இந்
திய விளையாட்டுத்துறை திணைக்கள செயலாளர் ரஜீவ் யாதவ், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இலங்கைக்கான பிரதி தூதுவர் அரிந்தம் பாக்ச்சிஇ இந்தியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தெற்காசிய விளையாட்டு விழா ஏற்பாட்டுக்குழு முக்கியஸ்தருமான பாசியா உள்ளிட்ட இந்தியக்குழுவினரும் இலங்கை விளையாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்திய விளையாட்டுத்துறை திணைக்கள செயலாளர் ரஜீவ் யாதவ் கருத்து வெளியிடுகையில்இ குவாஹாட்டியில் சீதோஷண நிலை சுமாராகவே இருக்கும். மலைச்சாரலையும் பெரிய நதியையும் கொண்ட ஷில்லொங்கில் குளிர்மையுடன் கூடிய காலநிலை நிலவும். எனினும் காலநிலைக் குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.
நாம் பொதுநலவாய விளையாட்டுவிழாவை ஏற்பாடுசெய்து நடத்தியிருந்தோம். அதற்கு நிகரான வகையிலேயே இவ்விழாவிற்கான ஏற்பாடுகளும் அமைந்துள்ளன. விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வீரஇ வீராங்கனைகள்இ அதிகாரிகளுக்கென குவாஹட்டியில் இரண்டு ஹோட்டல்களும் ஷில்லொங்கில் ஒரு ஹோட்டலும் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார்.
இந்தியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தெற்காசிய விளையாட்டு விழா ஏற்பாட்டுக்குழு முக்கியஸ்தருமான பாசியா கருத்து வெளியிடுகையில்இ
பாகிஸ்தான் நிச்சயமாக பங்குபற்றும். அதற்கான உறுதிமொழி அந் நாட்டிடம் இருந்து எமக்கு கிடைத்துள்ளது. இம் முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் பாகிஸ்தானிலிருந்து 270க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றவுள்ளனர். இவ்விளையாட்டு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குவாஹட்டிக்கும் ஷில்லொங்கிற்கும் இடையிலான தூரம் 90 கிலோமீற்றர்களாகும். வான் மார்க்கமாக செல்வதற்கு ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தலாம். தரைமார்க்கமாக ஒன்றரை முதல் இரண்டு மணித்தியாலங்கள் செல்லவேண்டும். அதற்கும் போக்குவரத்து வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்றார்.
ஆப்கானிஸ்தான்இ பங்களாதேஷ்இ பூட்டான்இ இந்தியாஇ மாலைதீவுஇ நேபாளம்இ பாகிஸ்தான்இ இலங்கை ஆகிய 8 நாடுகள் பங்குபற்றும் இவ் விளையாட்டு விழாவில் குவாஹாட்டியில் 16 வகையான விளையாட்டுப் போட்டிகளும்இ ஷில்லொங்கில் 7 வகையான விளையாட்டுகளும் நடத்தப்படவுள்ளன. மேலும் ஷில்லொங்கில் இரண்டு வகையான போட்டிகளே திறந்தவெளியில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM