(இராஜதுரை ஹஷான்)
பிரதமர் தினேஷ் குணவர்தன பதவி விலகவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். பதவி விலகுமாறு எத்தரப்பினரும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தவில்லை என பிரதம அமைச்சரின் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பிரதமரின் ஊடகச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பிரதமர் தினேஷ் குணவர்தன பதவி விலகவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.
பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை நெருக்கடிக்குள்ளாக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாகவே இந்த செய்தி காணப்படுகிறது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவை பதவி விலகுமாறு எத்தரப்பினரும் வலியுறுத்தவில்லை. ஆகவே, பிரதமர் பதவி விலகல் தொடர்பில் செய்தி பொய்யானது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவை பதவி நீக்கி, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தம்மிடம் வலியுறுத்தியதாக அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்க்கட்சி உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவை பதவி நீக்க கட்சி மட்டத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவ்வாறான யோசனையை எவரும் முன்வைக்கவில்லை. பிரதமர் தினேஷ் குணவர்தன ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்.
ஆகவே, அவர் பிரதமர் பதவி வகிப்பதில் எவ்வித பிரச்சினையும் தமக்கு கிடையாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. பிரதமர் தினேஷ் குணவர்தன எமது தரப்பினர். அவர் சிறந்த முறையில் செயற்படுகிறார் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM