சிவனொளிபாத மலையில் ஏறுவதற்கு போதைப்பொருட்களுடன் வந்த 15 இளைஞர்கள் கைதாகி பிணையில் விடுவிப்பு 

Published By: Nanthini

26 Feb, 2023 | 01:47 PM
image

சிவனொளிபாத மலையில் ஏறுவதற்கு பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் வருகை தந்த 15 இளைஞர்கள் கடந்த இரு நாட்களுக்குள் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

ஹட்டன் ரயில் நிலைய வளாகத்தில் நேற்றும் (25) நேற்று முன்தினமும் (24) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, ரயிலில் வந்த குறித்த இளைஞர்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். 

கொழும்பு, காலி, அநுராதபுரம் மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஹெரோயின், கஞ்சா, கஞ்சா கலந்த புகையிலை தூள் மற்றும் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் என்பன கைதான இளைஞர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட  பின்னர், எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிடப்பட்டு, சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33