இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் தீர்மானம் மிக்க ஐந்தாவது நாள் இன்றாகும்.

488 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, முதலாவது இன்னிங்ஸை விட திறம்பட துடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்தினாலும் நேற்றைய ஆட்டநேர முடிவின்போது 240 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்துள்ளது.

இந்நிலையில் வெற்றியிலக்கை அடைவதற்கு இலங்கை அணிக்கு இன்னும் 248 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது.

இன்றைய நாளுக்கான சகல ஓவர்களும் வீசப்படுமானால் இலங்கை அணிக்கு வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாக இருந்தாலும், அதற்கேற்றவாறு விக்கட்டுகள் கைவசம் இல்லை.

இலங்கை அணியை பொருத்தவரையில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கும் மெத்தியுஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஜோடி மிக முக்கியமான துறுப்புச்சீட்டாக கருதப்படுகிறது. 

இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமாயின் குறித்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும்.

இதேவேளை தென்னாபிரிக்க அணி சார்பில் அவர்களது வேகப்பந்துவீச்சாளர்கள் இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்களக்கு சவாலாக கருதப்படுகின்றனர்.