நடிகர் ஆதி கதையின் நாயகனாக நடித்து வரும் 'சப்தம்' எனும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
'திரில்லர் ஸ்பெஷலிஸ்ட்' என்ற அடையாளத்தை பெற்றிருக்கும் படைப்பாளி அறிவழகன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'சப்தம்'. இதில் ஆதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். இயக்குநர் அறிவழகனின் ஆல்ஃபா ப்ரேம்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து பிரபல தயாரிப்பாளர் 7 ஜி பிலிம்ஸ் சிவா இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து மூன்றாவது கட்ட படப்பிடிப்புகள் தற்போது மூணாறு பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் நாயகனான ஆதிக்கு ஜோடியாக நடிக்க நடிகை லட்சுமி மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
இதனிடையே ஆதியும், லட்சுமிமேனனும் முதன்முறையாக இணைகிறார்கள் என்றாலும், நடிகை லக்ஷ்மி மேனன் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் திரையுலகில் தீவிர கவனம் செலுத்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இவர் தற்போது ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சந்திரமுகி 2' படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM