9 நாடுகளின் சுற்றுலாப்பயணிகளை உள்ளீர்த்துக்கொள்வதில் விசேட அவதானம் - சாலக கஜபாகு

Published By: Digital Desk 3

25 Feb, 2023 | 05:47 PM
image

(நா.தனுஜா)

இவ்வாண்டில் இந்தியா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளடங்கலாக இலங்கைக்கு பெருமளவு சுற்றுலாத்துறைசார் வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய 9 நாடுகளின் சுற்றுலாப்பயணிகளை உள்ளீர்த்துக்கொள்வதில் வெகுவாகக் கவனம் செலுத்தியிருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டுப்பணியகத்தின் தலைவர் சாலக கஜபாகு தெரிவித்துள்ளார்.

'நாட்டின் சுற்றுலாத்துறை மேம்பாட்டைப் பொறுத்தமட்டில் நாம் பூகோள ரீதியிலான பிரசாரத்துக்குச் செல்லப்போவதில்லை. மாறாக 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்கை அடைந்துகொள்வதை முன்னிறுத்தி, இலங்கைக்கு அதிக சுற்றுலாத்துறைசார் வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய 9 நாடுகளின் உள்ளீர்த்துக்கொள்வதில் விசேட கவனம்செலுத்தியுள்ளோம்' என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகளவில் செலவிடக்கூடிய சுற்றுலாப்பயணிகளைக்கொண்ட இந்தியா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, மத்திய கிழக்கு நாடுகள், நோர்டிக் நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய 9 நாடுகளே இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டுப்பணியகத்தின் விசேட அவதானத்திற்குரிய நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருப்பதுடன், எதிர்வரும் மேமாதம் முதல் அந்நாடுகளின் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்குரிய பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இலங்கையானது இவ்வாண்டு சுமார் 1.55 மில்லியன் சுற்றுலாப்பயணிகளின் வருகையை அடைந்துகொள்வதற்கும், சுற்றுலாத்துறையின் ஊடாக 2.88 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கும் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்...

2024-04-15 07:43:44
news-image

இன்றைய வானிலை

2024-04-15 06:18:46
news-image

நுவரெலியா - மீபிலிபான இளைஞர் அமைப்பின்...

2024-04-15 03:09:11
news-image

தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டில் ‘இனப்படுகொலையின்’...

2024-04-15 02:53:31
news-image

வயிற்றுவலி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட இளம்...

2024-04-15 00:26:54
news-image

பொது வேட்பாளர் விடையத்தை குழப்ப பலர்...

2024-04-14 23:04:21
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : கறுப்பு...

2024-04-14 20:56:22
news-image

பலாங்கொடையில் இளைஞர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை!

2024-04-14 19:44:28
news-image

வெளி மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்காக...

2024-04-14 18:31:44
news-image

நாட்டில் பல இடங்களில் இடியுடன் கூடிய...

2024-04-14 17:58:50
news-image

புதுவருட தினத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

2024-04-14 17:45:32
news-image

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு...

2024-04-14 15:05:29