ஜனவரி - ஜூன் மாதம் வரை மனிதாபிமான உதவிகளை வழங்க 4.5 மில்லியன் டொலர் நிதி அவசியம் - உலக உணவுத்திட்டம்

Published By: Digital Desk 3

26 Feb, 2023 | 11:01 AM
image

(நா.தனுஜா)

உலக உணவுத்திட்டம் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள 636,125 பேருக்கு அவசியமான உதவிகளை வழங்கியிருப்பதுடன், எதிர்வரும் ஜூன் மாதம் வரையான 6 மாதகாலத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு 4.5 மில்லியன் டொலர் நிதி அவசியமென மதிப்பிட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மீட்சியடையாத நிலையில், அதன்விளைவாக உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருகின்றது. அதேவேளை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அமைப்புக்களான உலக உணவுத்திட்டம், உணவு மற்றும் விவசாய அமைப்பு, யுனிசெப் அமைப்பு என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு சர்வதேசப் பொதுக்கட்டமைப்புக்கள் அத்தியாவசிய உதவிகளை வழங்கிவருகின்றன.

அந்த வகையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருப்போருக்குக் கடந்த ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள உதவிகள் மற்றும் தேவையான நிதியுதவி என்பன குறித்து உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள மாதாந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தரவுகளின் பிரகாரம் இதுவரையான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மொத்தமாக 7 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதுடன் 1,069,557 மெட்ரிக் தொன் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதேவேளை கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 636,125 பேருக்கு அவசியமான அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று கடந்த ஆண்டு ஜுன் மாதம் உலக உணவுத்திட்டத்தின் அவசர உதவி வழங்கல் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தற்போதுவதை 489,040 பேருக்கு நிதியுதவியும் 362,100 குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள்சார் உதவியும் வழங்கப்பட்டுள்ளன. இந்த உதவிகள் மொத்தமாக 1.4 மில்லியன் மக்களைச் சென்றடையவேண்டும் என்பதே உலக உணவுத்திட்டத்தின் இலக்காகும்.

மேலும் நாட்டின் 25 மாவட்டங்களிலுள்ள 15,000 குடும்பங்களை இலக்குவைத்து உணவு மற்றும் விவசாய அமைப்பும் உலக உணவுத்திட்டமும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து உணவுப்பாதுகாப்பு தொடர்பான கூட்டு மதிப்பீடொன்றை முன்னெடுக்கவுள்ளன. அதுமாத்திரமன்றி இவ்வருடம் ஜனவரி முதல் ஜுன் மாதம் வரையான 6 மாதகாலப்பகுதியில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்குரிய உதவிகளை வழங்குவதற்கு 4.5 மில்லியன் டொலர்கள் அவசியமென மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதான எதிர்க்கட்சி தலைவர் வேட்பாளரா? பிரதமர்...

2024-10-13 12:12:07
news-image

விசேட தேவையுடைய சிறுவர்களை சித்திரவதை செய்த...

2024-10-13 12:00:53
news-image

பொறுப்புக்கூறலுக்கு உள்நாட்டு பொறிமுறை - உயிர்த்த...

2024-10-13 12:05:06
news-image

பிரிக்ஸ் அமைப்பில் இணைகிறது இலங்கை :...

2024-10-13 11:40:10
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சிவராம்...

2024-10-13 11:24:35
news-image

ஹுங்கமவில் கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து...

2024-10-13 11:19:29
news-image

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை...

2024-10-13 11:03:13
news-image

ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்களின் தெரிவு...

2024-10-13 11:23:53
news-image

லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் -...

2024-10-13 11:04:44
news-image

அநுர - ரணில் இடையே வித்தியாசமில்லை...

2024-10-13 10:30:26
news-image

196 ஆசனங்களுக்கு 8388 வேட்பாளர்கள் போட்டி...

2024-10-13 10:13:12
news-image

வடமராட்சியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு...

2024-10-13 10:50:56