கூட்டு எதிர்கட்சியினர் மூன்று முக்கிய ஆலயங்களில் இன்று சிதறு தேங்காய்  நேர்த்திக்கடனை செலுத்தவுள்ளனர்.

இதன்படி முன்னேஸ்வர ஆலயம், நவகமுவ பத்தினியம்மன் ஆலயம் மற்றும் ஹிக்கடுவ சீனிகம மஹா விஷ்ணு போன்ற ஆலயங்களில் குறித்த நேர்த்திக்கடனை செலுத்தவுள்ளனர்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் அரசாங்கம் மக்கள் மீது சுமத்தும் வரி போன்ற விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த நேர்த்திக்கடனை நிறைவேற்றவுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.