(நமது நிருபர்)
பொதுஜனபெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் போரசிரியர் சன்ன ஜயசுமான அதற்கு தமது ஆதரவினை வழங்குமாறு ஆளும்தரப்பில் உள்ள நண்பர்கள் கோரியதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
தலைவலிக்கு, தலையணையை மாற்றுவதால் பயனில்லை என்று தெரிவித்த அவர் முழு அரசாங்கமும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும், மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டிய தருணம் வந்துவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் சன்ன ஜயசுமான தற்போது அக்கட்சியிலிருந்து வெளியேறி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் கூட்டமைப்பில் அங்கத்துவராக செயற்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுஜனபெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை வகித்தவருமான மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஆளும் தரப்பினால் முயற்சிக்கப்படுகின்றது.
இதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், என்னிடத்தில் ஆளும் தரப்பு நண்பர்கள் அச்செயற்பாடு வெற்றியடைவதற்கான ஆதரவினை வழங்குமாறு கோரியிருந்தனர்.
அத்துடன், எமது சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் ஆதரவினையும் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டனர்.
இந்த முயற்சியானது, தலைவலிக்கு தீர்வாக தலையணையை மாற்றுகின்ற செயற்பாட்டுக்கு ஒப்பானதாகும். தற்போதைய நிலையில் மக்கள் ஆணையை இழந்துள்ள அரசாங்கம் ஒட்டுமொத்தமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
அதனடிப்படையில், நானோ எமது அணியோ மேற்படி செயற்பாட்டிற்கு ஒருபோதும் ஆதரவினை வழங்கப்போவதில்லை.
மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளார். அதற்கான புகழுடன் அவர் தனது இறுதிக்காலத்தினை கழிக்க வேண்டுமாக இருந்தால் அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்ல வேண்டும். அதுவே பொருத்தமான செயற்பாடாக இருக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM