அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கட்டுகளை இழந்து 443 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பில் இரட்டை சதத்தை பூர்த்திசெய்த அஷார் அலி ஆட்டமிழக்காமல் 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் 2 ஆலது இன்னிங்ஸை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஸ்மித் மற்றும் வோர்னரின் சிறந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன், 624 ஓட்டங்களை பெற்றுக்ககொண்டது.

ஸ்மித் 164 ஓட்டங்களையும், வோர்னர் 144 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் 181 ஓட்டங்கள் பின்னடைவிலிருந்து ஆட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 163 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்துள்ளது.

பாகிஸ்தான் அணிசார்பில் சப்ராஸ் அஹமட் மற்றும் அஷார் அலி தலா 43 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணியின் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.