எல்லை நிர்ணய குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்படும் - மஹிந்த தேசப்பிரிய

Published By: Digital Desk 5

25 Feb, 2023 | 01:51 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சிமன்றங்களுக்கான எல்லை நிர்ணய குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை செவ்வாய்கிழமை (28) பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய குழு மாவட்ட மட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ள பரிந்துரைகள் , வெவ்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய பரிந்துரைகள் மற்றும் தமது முன்மொழிவுகள் என்பவற்றைப் பரிசீலனை செய்து மாவட்ட மட்டத்திலான எல்லை நிர்ணய பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மாவட்டங்களுக்கு விஜயம் செய்து குறித்த அறிக்கைக்கு தேவையான பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய மார்ச் 31ஆம் திகதிக்குள் எல்லை நிர்ணயம் தொடர்பான இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

25 மாவட்டங்களில் 15 மாவட்டங்களின் செயற்பாடுகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. மேலும் 6 மாவட்டங்களின் செயற்பாடுகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஏனையவற்றில் இரு மாவட்டங்களின் செயற்பாடுகள் மாத்திரமே 50 சதவீதத்தையும் விடக் குறைவாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

எனவே எமது முழுமையான அறிக்கையை எதிர்வரும் மார்ச் 25 - 31ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரித்து சமர்ப்பிக்கவும் , இடைக்கால அறிக்கையை அடுத்த வாரம் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானித்துள்ளோம். அதற்கமைய தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8800இலிருந்து , 5100 அல்லது 4900 வரை குறைக்க முடியும் என்று நம்புகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04