மேகாலயாவில் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாராலும் தடுக்க முடியாது- நானும்  சாப்பிடுகிறேன்: மேகாலயா பாஜக தலைவர் 

Published By: Sethu

24 Feb, 2023 | 04:24 PM
image

மேகாலயா மாநிலத்தில் அனைத்து தரப்பினரும் மாட்டிறைச்சி சாப்பிடுகின்றனர். நானும் அதை சாப்பிடுகிறேன் என பாரதிய ஜனதா கட்சியின் மேகாலயா மாநிலத் தலைவர்  ஏர்னஸ்ட் மாவ்ரி கூறியுள்ளார்.

இந்தியாவின் பல மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி விற்பனை செய்தமைக்காகவும், மாட்டிறைச்சி உட்கொண்டமைக்காகவும் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்திலுள்ள மேகாலாய மாநிலத்தில் தான் உட்பட அனைத்து தரப்பினரும் மாட்டிறைச்சி உட்கொள்வதாக மாநில பாஜக தலைவர் கூறியுள்ளார்.

மேகாலயா தேர்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி,  சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கூட்டணி உடைந்தது. இந்நிலையில் பாஜக இத்தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ், திரிணாமூல் கட்சிகளும் இந்த தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

இந்நிலையில்,  பாஜகவின் மேகாலயா மாநிலத் தலைவர்  ஏர்னஸ்ட் மாவ்ரி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில், 

'பாஜக ஆட்சி செய்து வரும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து என்னால் பேச முடியாது. நாங்கள் இருப்பது மேகாலயா. இங்குள்ள கலாசார முறையை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். இங்கு பெரிய கறிக்கடைகள் இயங்கி வருகின்றன. அந்த கடைகளில் மாட்டுக்கறி, பன்றி இறைச்சி ஆகியவை வெளிப்படையாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

நானும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன். எங்களின் சொந்த உணவு பழக்க வழக்கங்களையே நாங்கள் கடைபிடித்து வருகிறோம். அதை பின்பற்றுவதற்கு எந்த தடையும் கிடையாது. 

பாஜக சாதி, மதம் பார்க்காது யாராலும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தடுக்க முடியாது. எதை சாப்பிட வேண்டும், சாப்பிடக் கூடாது என்ற எந்த விதமான கட்டுப்பாடுகளும் எங்களுக்கு இல்லை. சாதி, மதம், பழக்க வழக்கங்கள் சார்ந்து பாஜக எந்த காரணத்தை கொண்டு யோசிக்காது' என்றார்.

இம்முறை மேகாலாய தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைக் கைப்பற்றும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் இந்தியாவுக்குச் செல்வேன் - ட்ரம்ப்...

2025-11-07 16:00:42
news-image

தாய்லாந்தில் பிரபஞ்ச அழகிப் போட்டி -...

2025-11-07 15:27:34
news-image

கல்மேகி புயலின் தாக்கம் - பிலிப்பைன்ஸ்,...

2025-11-07 14:10:04
news-image

கல்மேகி புயலில் சிக்கி பிலிப்பைன்ஸில் உயிரிழந்தவர்களின்...

2025-11-07 13:42:55
news-image

உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும்...

2025-11-07 12:38:54
news-image

ஒரு குழந்தையின் தாய் எறும்பு பயத்தால்...

2025-11-07 03:11:10
news-image

மெக்சிக்கோ ஜனாதிபதியிடம் அத்துமீறி முத்தமிட முயன்ற...

2025-11-06 13:32:30
news-image

"நிறைய இழக்க நேரிடும்" - மம்தானிக்கு...

2025-11-06 13:29:51
news-image

போஸ்னியா முதியோர் இல்லத்தில் தீவிபத்து: 11...

2025-11-06 12:45:24
news-image

'நாசா' தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர்...

2025-11-06 12:07:03
news-image

கல்மேகி சூறாவளியால் 114 பேர் பலி...

2025-11-06 11:24:25
news-image

நியூயோர்க் நகரின் மேயராக ஸோஹ்ரான் மம்தானி...

2025-11-05 12:05:31