யுத்தத்துக்கு முடிவு காண ரஷ்யா, உக்ரேன் அவசரமாக பேச வேண்டும்: சீனா வலியுறுத்தல்

Published By: Sethu

24 Feb, 2023 | 03:24 PM
image

உக்ரேனிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ரஷ்யாவும் உக்ரேனும் அவசரமாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என சீனா இன்று வலியுறுத்தியுள்ளது.

உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமாகி ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில சீனா இக்கோரிக்கையை விடுத்துள்ளது.

'அரசியல் தீர்வுக்கான' 12 அம்ச திட்டமொன்றை சீன வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தைகக்காக அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும் என சீனா கோரியுள்ளது. 

அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதை மாத்திரமல்லாமல், அணுவாயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தல் விடுப்பதையும் தான் எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

எனினும், சீனாவின் கருத்தை அமெரிக்கா விமர்சித்துள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடனின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சுலீவன் இது தொடர்பாக கூறுகையில், உக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்திவிட்டு தனது படைகளை வாபஸ் பெற்றால் நாளையே இந்த யுத்தம் முடிவடைந்துவிடும் எனக் கூறியுள்ளார்.

'ரஷ்யா மீது யுக்ரைன் தாக்குதல் நடத்தவில்லை. ரஷ்யா மீது நேட்டோ தாக்கவில்லை.  ரஷ்யாவை அமெரிக்கா தாக்கவில்லை' என அவர் கூறியுள்ளார். இந்த யுத்தத்தில் ரஷ்யா ஏற்கெனவே தோற்றுவிட்டது எனவும் சுலீவன் கூறியுள்ளார்.

இதேவேளை, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், உக்ரைன் மற்றம் ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் பேசுகையில், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு சீனா மேலும் அதிகம் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

தனது படைகளை ரஷ்யா வாபஸ் பெறுவதற்கு சீனா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் இரு தரப்புடனும் சீனா  பேச வேண்டம் எனவும் சீனாவுக்கான உக்ரேனிய தூதுவர் ஸானா லேஷ்சென்ஸ்க்யா கூறினார். 

சீனா நடுநிலையாக இருப்பதென்றால் இரு தரப்புடனும் சீனா பேச வேண்டும். உக்ரேனைவிட ரஷ்யாவுடனேயே சீனா அதிகமாக பேச்சுவார்த்தை நடத்துகிறது எனவும் அவர்கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52