கல்வி அமைச்சில் ஆசிரியர்களை தாக்கியது ஏன் ? ஐக்கிய மக்கள் சக்தி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

Published By: Digital Desk 5

24 Feb, 2023 | 04:48 PM
image

(எம்.மனோசித்ரா)

கல்வி அமைச்சில் கடமைகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் இருவர் எவ்வித காரணமும் இன்றி பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்து , சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் றோஹிணி கவிரத்ன பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்ற சபையின் அலுவலகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் வியாக்கிழமை (23) சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளமையானது சமூகத்திலும் , ஆசிரியர்கள் மத்தியிலும் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு பாரதூரமான தாக்குதலுக்கு உள்ளாகியவர்கள் அன்றைய தினம் தமது தேவைகளுக்காக குறித்த அலுவலகத்திற்குச் சென்றிருந்தவர்களாவர். இவர்கள் எவ்வித காரணமும் இன்றி பாரதூரமாக தாக்கப்பட்டதோடு மாத்திரமின்றி கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நியாயமற்ற செயற்பாட்டில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை இனங்கண்டு , துரிதமாக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41