(எம்.மனோசித்ரா)
தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சிற்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலுக்கான நிதியை ஒதுக்குவதும் , அதனை விடுவிப்பதும் நிதி அமைச்சு மற்றும் நிதி அமைச்சரின் பொறுப்பாகும். எனினும் நிதி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்திற்கமைய தேர்தலை நடத்துவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளோம். அதே போன்று நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பிலும் எதிர்வரும் தினங்களில் வழக்கு தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
அதே போன்று அரச அதிகாரிகள் தேர்தலை நடத்துவதில் தடையாக செயற்படுகின்றமை தொடர்பிலும் நடவடிக்கை எடுப்போம்.
எவ்வாறேனும் மக்களின் வாக்குரிமையை பாதுகாத்து இறையான்மையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம். இதற்காக உச்சபட்ச சட்ட நடவடிக்கையையும் எடுப்போம். நிதி அமைச்சினை தேர்தலுக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் வழக்கு தாக்கல் செய்வோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM