போலி ChatGPT செயலி குறித்து வல்லுநர்கள் எச்சரிக்கை

Published By: T. Saranya

24 Feb, 2023 | 12:52 PM
image

போலி ChatGPT செயலி மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருட வாய்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 

ChatGPT ஆனது கடந்த சில வாரங்களாக மனிதனைப் போன்ற Chating செய்வது போன்ற பல நிகழ்வுகள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. AI chatbotஇன் சுவாரஸ்யமான பதில்கள் நெட்டிசன்களின் இதயங்களைக் கொள்ளையடித்து வருகின்றன. ஆனால், ChatGPT ஐ முயல வேண்டும் என்ற ஆர்வத்தை இப்போது சைபர் கிரைமினல்கள் பயனர்களை ஏமாற்ற பயன்படுத்திவருகின்றனர்.

மோசடி செய்பவர்கள் சமூக ஊடகச் சான்றுகள் உட்பட உங்களின் முக்கியமான தகவல்களைத் திருடக்கூடிய பிரத்தியேகமாக நிர்வகிக்கப்பட்ட போலி ChatGPTயைப் பயன்படுத்துகின்றனர். சைபர் செக்யூரிட்டி நிறுவனமான காஸ்பர்ஸ்கியின் ஆராய்ச்சியாளர்கள் குழு, சைபர் கிரிமினல்கள், பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் விநியோகிக்கப்படும் ChatGPT போல தோற்றமளிக்கும் Bot ஒன்றை வடிவமைத்துள்ளனர் என்று கண்டறிந்துள்ளனர்.

சமூக ஊடக பயனர்கள் அவர்களை ChatGPT க்கு அழைத்துச் செல்வதாக உறுதியளிக்கும் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம், ஈர்க்கப்படுகிறார்கள். குரோம், எட்ஜ், பயர்பாக்ஸ் மற்றும் பிரேவ் போன்ற பிரபலமான உலாவிகளில் சேமிக்கப்பட்ட முக்கியமான தகவல்களை இந்த போலியான ChatGPT போலத் தோன்றும் ட்ரோஜன் திருடும் திறன் கொண்டது.

இந்த கணினி தாக்குதலின் ஒரு பகுதியாக, ட்ரோஜன் பயனர்களின் பணத்தின் அளவு மற்றும் வணிகக் கணக்குகளின் தற்போதைய இருப்பு போன்ற கூடுதல் தகவல்களைப் பெற முயல்வதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்ஜிபிடி போன்ற எழுதும் கருவிகளே கற்றலின்...

2023-03-27 10:17:06
news-image

கொலம்பியாவில் பணயக் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்த 78...

2023-03-06 11:27:05
news-image

போலி ChatGPT செயலி குறித்து வல்லுநர்கள்...

2023-02-24 12:52:35
news-image

அதிமுக பொதுக்குழு வழக்கு – உச்சநீதிமன்றம்...

2023-02-23 11:30:56
news-image

இனி நாமும் பெறலாம் ‘ப்ளூ டிக்’

2023-02-22 17:52:27
news-image

பேஸ்புக், இன்ஸ்டாவில் ப்ளூ டிக் பெற...

2023-02-20 09:54:23
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் போட்டி

2023-02-08 13:05:35
news-image

இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் அதிக...

2023-02-01 12:29:55
news-image

சீனா கொவிட் - பிரபலங்கள் மரணம்...

2023-01-06 13:10:35
news-image

பல நாடுகளில் டுவிட்டர் முடங்கியதாக தகவல்

2022-12-29 11:55:05
news-image

டிசம்பர் 31க்கு பின் 49 ஸ்மார்ட்போன்களில்...

2022-12-28 15:20:12
news-image

வயர்லெஸ் இயர்பட்களை வாங்குவதற்கான ஆலோசனைகள்

2022-12-24 15:54:44