(நெவில் அன்தனி)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் நாயகமாக கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி தெரிவான பி.சி.எஸ். இந்திக்க, அப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜே. ஸ்ரீரங்கா உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்துள்ளதாக இந்திக்க குறிப்பிட்டார்.
'யாருடனும் எனக்கு பிரச்சினை எதுவும் இல்லை. தனிப்பட்ட காரணத்திற்காகவே எனது பதவியை இராஜினாமா செய்துள்ளேன். இனிமேல் எந்த பதவியும் வகிக்காத போதிலும் இலங்கை கால்பந்தாட்டத்தின் மேம்பாட்டுக்காக எப்போதும் போல் தொடர்ந்தும் உழைப்பேன்' என அவர் குறிப்பிட்டார்.
ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக உத்தியோகத்தர்களுக்கான தேர்தலில் செயலாளர் நாயகம் பதவிக்கு போட்டியிட்ட யாழ். கால்பந்தாட்ட லீக் பிரதிநிதி ஈ. ஆர்னல்டை 29 - 22 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் மாத்தறை கால்பந்தாட்ட லீக் பிரதிநிதி இந்திக்க வெற்றிகொண்டிருந்தார்.
இது இவ்வாறிருக்க, புதிய நிருவாகிகள் தெரிவாகி ஒரு வாரம் கழித்து தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை எனவும் அரசியல் தலையீடு இருந்தது எனவும் தெரிவித்து இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தை FIFA தடை செய்திருந்தது.
இதன் காரணமாக இலங்கை தேசிய அணியும் கழகங்களும் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் தகுதியை இழந்துள்ளன.
இந் நிலையில் இந்தியாவில் இவ் வருட மத்தியில் நடைபெறவுள்ள சாவ் கிண்ணப் போட்டியிலும் இலங்கைக்கு பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவவ்வாறான சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி பீபாவுக்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனமும் விளையாட்டுத்துறை அமைச்சும் கடிதங்கள் அனுப்பியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.
அத்துடன் நிலைமையை ஆராய இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக பீபா தங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM