(எம்.எம்.சில்வெஸ்டர்)
1992 இல் பாகிஸ்தான் அணி இந்தியாவில் வைத்த உலகக் கிண்ணத்தை வென்றது போன்று, இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. உலகக் கிண்ணத்தை பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என பாபர் அசாம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டுள்ள ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்கவில்லை என்றால் பாகிஸ்தான் இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராசா கூறியிருந்த நிலையில், பாபர் அசாமின் இந்த கருத்தை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
இவ்விடயம் குறித்து பாபர் அசாம் கூறுகையில்,
“நான் நிறைய சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், இப்போதைக்கு எனது பிரதான இலக்கு , அது நடப்பு பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் சதம் விளாசுவதுடன், பெஷாவர் அணிக்கு சம்பியன் பட்டம் வென்று கொடுப்பதும்தான்.
அதேபோல இவ்வாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி.உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டுமென்று விரும்புகிறேன். எங்கள் அணி வெற்றி பெறுகின்ற அணியாக இருக்க வேண்டும்.
நான் சில புதிய துடுப்பாட்ட முறைகளை முயற்சித்து வருகிறேன். எனக்கு அதில் நம்பிக்கை கிடைக்கும் பட்சத்தில் போட்டிகளில் அதைச் செய்வேன்.அதே நேரத்தில் எனது வழமையான துடுப்பாட்ட பாணியையும் தொடருவேன்” என்றார்.
இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி , உலகக் கிண்ணத்தை 1992 இல் இந்தியாவில் நடைபெற்றபோதே கைப்பற்றிருந்த நிலையில், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இம்முறை இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ணத்தை வெல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM