நாட்டின் முன்னணி அரச அபிவிருத்தி வங்கியான பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏழாவது தலைவராக திரு.சுசந்த சில்வா செவ்வாய்க்கிழமை (21) முற்பகல் பதவியேற்றார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பதவி உட்பட பல பிரதான நிறுவனங்களில் நிறைவேற்று மட்டத்தில் பதவிகளை வகித்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிற்துறைகளில் 40 வருட அனுபவத்துடன் தனது கடமைகளை ஆரம்பித்த RDB யின் புதிய தலைவர் திரு.சுசந்த சில்வா ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய போது,
'நிலவும் சவால்களை வென்று நாட்டின் அபிவிருத்திக்கு பிரதேச அபிவிருத்தி வங்கியின் பங்களிப்பை குறைவின்றி நிறைவேற்ற தற்போதிலிருந்தே செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தயார் எனவும், அத்தோடு அலுவலக ஊழியர் குழாமுடன் இணைந்து திருப்திகரமான சேவைகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம் RDB வங்கியின் குறியீடு அழியாமல் உயர்ந்த நிலையில் வைப்பதற்கு தான் உத்தரவாதம் அளிப்பதாகவும்" குறிப்பிட்டார்.
களனியில் அமைந்துள்ள RDB பிரதான அலுவலகத்தில் புதிய தலைவரை வரவேற்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த எளிய வைபவத்தில் வங்கியின் பொது முகாமையாளர்/ பிரதான நிறைவேற்று அதிகாரி (பதில் கடமையாற்றுபவர்) திரு.சுமேத ஏதிரிசூரிய, பிரதி பொது முகாமையாளர்கள் உட்பட பிரதான அலுவலகத்தின் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM