(நெவில் அன்தனி)
எகிப்து தேசத்தின் கிஸா அரங்கில் நடைபெறவுள்ள எகிப்து பரா பகிரங்க மேசைப்பந்தாட்டம் போட்டியில் இலங்கையின் நட்சத்திர பரா மேசைப்பந்தாட்ட வீரர் தினேஷ் தேஷப்ரிய பங்குபற்றவுள்ளார்.
சனிக்கிழமை (25), ஞாயிற்றுக்கிழமை (26) ஆகிய இரண்டு தினங்களில் இப் போட்டி நடைபெறவுள்ளது.
சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப் போட்டி ITTF Standing Class Nine Championship என அழைக்கப்படுகிறது.
அப் போட்டியில் பங்குபற்றும் தினேஷின் முகாமையாளராக பிறிகேடியர் டி.கே. அலுதெனிய சென்றுள்ளார்.
இன்ச்சொன் 2014 பரா ஆசிய விளையாட்டு விழாவில் மேசைப்பந்தாட்டம் 10 பிரிவு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தினேஷ், 2019 தாய்லாந்து பரா பகிரங்க மேசைப்பந்தாட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
இலங்கையில் தேசிய பராலிம்பிக் குழுவுக்கும் பரா விளையாட்டுக்களுக்கும் பூரண அனுசரணை வழங்கிவரும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் தினேஷ் மற்றும் பிறிகேடியர் அலுதெனிய ஆகியோருக்கு அனுசரணை வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM