முள்ளம்பன்றியும் மாக்பி பறவையும்

Published By: Digital Desk 3

24 Feb, 2023 | 02:57 PM
image

சமூக ஊடகத்தில் முள்ளம்பன்றி ஒன்றுக்கு மாக்பி பறவை ஒன்று உதவுவதை காட்டும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.

இருப்பினும், இதனை இணையத்தள வாசிகள் வேறுவிதமாக கருதுகின்றார்கள்.

தற்போது வைரலாகும் காணொளியில், வீதியின் நடுவில் ஒரு மாக்பி பறவை மற்றும் ஒரு முள்ளம்பன்றி இருப்பதைக் காட்டுகிறது.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்து பதிவு செய்ய சாரதி காரை நிறுத்தினார். பறவை பயந்துபோன முள்ளம்பன்றியை அதன் அலகினால் தொடர்ந்து தாக்கி வீதியைக் கடக்க உதவியது.

பின்பு அவர் அந்த அழகிய  தருணத்தை படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்த காணொளியை கேப்ரியல் கார்னோ டுவிட்டரில் "பயந்துள்ள முள்ளம்பன்றி வீதியைக் கடக்க மாக்பி உதவுவதைப் பார்க்க சாரதி வேகத்தைக் குறைத்தார் " என   தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார். இதனை 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த  காணொளி பல எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. சில இணையவாசிகள் பறவை உண்மையில் பசியுடன் இருப்பதாகவும், ஏதாவது சாப்பிட விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

"மாக்பீ பறவைகள் பெரும்பாலும் உருளைக்கிழங்கை சாப்பிடும், ஒருவேளை அது வீதியில் ஒரு உருளைக்கிழங்கு இருப்பதாக  நினைத்திருக்கலாம்" என  ஒரு நபர் கேலி செய்துள்ளார்.

"உங்கள் மாயையை நான் கெடுக்க விரும்பவில்லை, ஆனால் பறவை எதையாவது சாப்பிட விரும்புகிறது மற்றும் முள்ளம்பன்றி இன்னும் உயிருடன் இருப்பதால் அவர் மிகவும் ஏமாற்றமடைந்தார்" என மற்றொரு நபர் கருத்து தெரிவித்துள்ளார்.

முள்ளம்பன்றியும் மாக்பி பறவையும் காணொளி ;

https://twitter.com/Gabriele_Corno/status/1628318732933115905

முக்கிய செய்திகள்

icon-left
icon-right