ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் வெகுவிரைவில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் - சந்திம வீரக்கொடி

Published By: Vishnu

23 Feb, 2023 | 06:03 PM
image

(எம்,ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசை ரணில்- ராஜபக்ஷ குடும்ப ஆட்சியாக மாற்றியமைக்கும் முயற்சியை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை மலினப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டு மக்கள் வெகுவிரைவில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (23) வியாழக்கிழமை இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை கவலைக்குரியது. நாட்டு மக்களின் அடிப்படை தேர்தல் உரிமையை ஜனாதிபதி பறித்துள்ளார்.

இது பாராளுமன்றத்தில் வெளிப்பட்டு விட்டது. நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை நகைப்புக்குள்ளாக்கியுள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி  ரணில விக்கிரமசிங்க தேர்தல் தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசை  ரணில் - ராஜபக்ஷ குடும்ப ஆட்சியாக மாற்றியமைக்கும் முயற்சியை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும்,நீதிமன்றத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலும் ஜனாதிபதி செயற்படுகிறார்.

உள்ளுராட்சிமனறத் தேர்தலுக்கு ஏற்படுத்திய தடைகளை ஜனாதிபதி வெட்கமில்லாமல் குறிப்பிடுகிறார்.தேர்தலை நிதி ஒதுக்கும் போது மாத்திரம் தான் நிதி நெருக்கடி ஏற்படும் என குறிப்பிடப்படுகிறது.

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை மலினப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாட்டு மக்கள் வெகுவிரைவில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20