பிர­பா­க­ரனே தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை வெளிச்­சத்­துக்கு கொண்­டு­வந்­தவர். அவர் மீது தமிழ் மக்­க­ளுக்கு இருக்கும் மரி­யா­தையை ஒரு­போதும் இல்­லா­ம­லாக்க முடி­யாது. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனும் பிர­பா­கரன் தொடர்பில் கருத்து தெரி­வித்­துள்ளார் என நவ சம­ச­மாஜ கட்­சியின் தலைவர் விக்­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன தெரி­வித்தார்.

நவ சம­ச­மாஜ கட்சி காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர்  சந்­திப்­பின்­போது விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­கரன் உயி­ருடன் இருந்­தி­ருந்தால் பிர­த­ம­ரா­கி­யி­ருப்பார் என இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­துள்ள கருத்து தொடர்­பாக ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ரினால் கேட்­கப்­பட்ட கேள்­வி­யொன்­றுக்கு பதி­ல­ளித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

பிர­பா­க­ரனின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பெரும்­பான்­மை­யான தமிழ் மக்­க­ளுக்கு இணக்­கப்­பாடு இல்­லா­விட்­டாலும் அவர்­மீது மரி­யாதை இருந்து வரு­கின்­றது. ஏனெனில் பிர­பா­கரன் குறிப்­பாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்­கொண்டு வந்த பிரச்­சி­னை­களை  வெளிச்­சத்­துக்கு கொண்­டு­வந்தார். அதனால் அவர் மீது தமிழ் மக்கள் வைத்­தி­ருக்கும் மரி­யா­தையை யாராலும் நிறுத்த முடி­யாது. அத்­துடன் தமிழ் மக்கள் அவர் மீது மரி­யாதை செலுத்­து­வதால் எந்த பிரச்­சி­னையும் ஏற்­ப­டப்­போ­வ­து­மில்லை.

பிர­பா­க­ரனை யாரேனும் புகழ்ந்­தாலோ அல்­லது உயர்த்தி பேசி­னாலோ அதற்­காக அவர்கள் பிர­பா­க­ரனின் வழியை பின்­பற்றி செல்­கின்­ற­வர்கள் என்று கருத்து கொள்ள முடி­யாது. பொது­வாக எங்­க­ளுக்கு எதிர் கருத்­து­டை­யவர் மர­ணித்தால் நாங்கள் அவ­ரு­டைய கொள்­கையை நிரா­க­ரித்­தாலும் அவர் தொடர்­பி­லான நல்­லெண்­ணங்­களை வெளிப்­ப­டுத்­து­வது சாதா­ரண விடயம். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனும் பிர­பா­கரன் தொடர்பில் வைத்­தி­ருக்கும் மரி­யா­தை­யி­லேயே இவ்­வாறு கருத்து தெரி­வித்­துள்ளார். 

அத்­துடன் விஜ­ய­கலா மகேஸ்­வரன் பிர­பா­கரன் தொடர்பில் கருத்து தெரி­வித்தார் என்­ப­தற்­காக அவர் பிர­பா­கரன் வழியில் செல்­லப்­போ­வ­தாக ஒருபோதும் தெரிவித்திருக்கவில்லை. அவ்வாறு தெரிவித்திருந்தால் அதனை அரசியல் பிரச்சினையாக தெரிவிக்கலாம். ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. அத்துடன் இதில் பிரச்சினைப்படுத்துவதற்கும்  எந்த விடயமும் இல்லை என்றார்.