(எம்.மனோசித்ரா)
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல ஆயத்தங்களையும் செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவிடுமாறு கோரி ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இன்று வியாழக்கிழமை குறித்த ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது , தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், தேர்தலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் தேர்தலுக்கான நிதியை திறைசேரி விடுவிக்காமையின் காரணமாக தேர்தலை நடத்துவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்துமாறு உத்தரவிடக்கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேணல் தாக்கல் செய்துள்ள ரிட் மனு கடந்த 20ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எனினும் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கான சாத்தியம் இல்லை என்பதால் அதனை இன்று வியாழக்கிழமை பரசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கமை இந்த ரிட் மனு மீதான பரசீலனையை எதிர்வரும் மே 11ஆம் திகதி ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM