(நா.தனுஜா)
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் என்பன உள்ளடங்கலாக நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைவரம் குறித்து ஜேர்மனியப் பாராளுமன்ற உறுப்பினர் பீற்றர் ரம்ஸோருக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியப் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழுவில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அறிக்கையாளராகப் பதவிவகிக்கும் பீற்றர் ரம்ஸோர் கடந்த 14 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்ததுடன் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை வரை நாட்டில் தங்கியிருந்தார்.
இவ்விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த பீற்றர் ரம்ஸோர், இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான இராஜதந்திரத்தொடர்புகள் ஆரம்பமாகி 70 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் விரிவுபடுத்துவது குறித்துக் கலந்துரையாடினார்.
அதேவேளை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிலையத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்ட தொழிற்பயிற்சியின் விளைவாக நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பினை அடிக்கோடிட்டுக்காண்பித்த அமைச்சர் அலி சப்ரி, பல்வேறு செயற்திட்டங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய ஒருங்கிணைப்பையும் வரவேற்பதாகத் தெரிவித்தார்.
அதேபோன்று அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டுவதை முன்னிறுத்திய நடவடிக்கைகள், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் என்பன உள்ளடங்கலாக நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைவரம் குறித்து பீற்றர் ரம்ஸோருக்கு விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM