வவுனியா விமானப்படை தளத்தில்  கடைமையாற்றும் அருனசாந்த 31 வயது என்கின்ற விமானப்படை வீரர் நேற்றைய தினம் விபத்தொன்றில்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

மேலும் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

நேற்றைய தினம் வருட இறுதி களியாட்ட நிகழ்வொன்றில் பங்கு பற்றிய விமானப்படை வீரர் மது போதையில்  படைதளத்திற்குள் தனது இருப்பிடத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் ஸ்தலத்திலேயே பலியானதாக அறியப்படுகிறது. 

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.