வவுனியாவில் போதையை ஏற்படுத்தக்கூடிய மருந்தை விற்பனை செய்தவர் கைது

Published By: Digital Desk 3

23 Feb, 2023 | 01:03 PM
image

வவுனியாவில் போதையினை ஏற்படுத்தக்கூடிய  மருந்தினை விற்பனை செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 400 மருந்து வில்லைகளையும் கைப்பற்றியுள்ளன.

போதையினை ஏற்படுத்தக்கூடிய மருந்து விற்பனை செய்வதாக போதை தடுப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் ஆலோசனையில் உப பொலிஸ் பரிசோதகர் மதுசங்க அவர்களின் வழிகாட்டலில் பொலிஸ் சார்ஐன் கேரத் (14692) , பொலிஸ் கொஸ்தாபர்களான ரணில் (81010), சமிந்த (82175), மிதுசன் (91800) , தினேஸ் (99172) ஆகியோர் அடங்கிய குழுவினர் திருநாவற்குளம் பகுதியில் குறித்த நபர்களை மறித்து சோதனை நடவடிக்கைளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது அவரின் உடமையிலிருந்து PREGABALIN CAPSULES GABIN-150 என்ற போதையினை ஏற்படுத்தக்கூடிய 400 மருந்து வில்லைகளை கைப்பற்றியதுடன் குறித்த மருந்தினை வைத்திருந்த 23 வயதுடைய இளைஞளை பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த மருந்துகள் அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் சமயத்தில் போதையினை ஏற்படுத்தக்கூடியது எனவும் மருந்தகங்களில் 20 ரூபா தொடக்கம் 50 ரூபாவிற்குள் விற்பனை செய்யப்படும் மருந்தினை இவர்கள் 500ரூபா தொடக்கம் 600ரூபா வரையில் விற்பனை செய்வது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் சந்தேக நபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குறிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் வவுனியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓர் தனியார் மருந்தகத்தில் மாத்திரம் 10 மாதங்களில் 42,700 போதை மருந்து கொள்வனவு செய்தமை பாரிய குற்றம் என வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் நிலக்சன் , வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட் பிரீஸ் , வவுனியா மேலதிக சுகாதார வைத்திய அதிகாரிகளான பிரசன்னா மற்றும் அரங்கன் , உணவு மருந்து பரிசோதகர் , வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஆகியோர் அடங்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கையில் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08