கம்போடியாவில் பறவைச் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 11 வயதான ஒரு சிறுமி உயிரிழந்துள்ளாள்.
கடந்த 16 ஆம் திகதி, காய்ச்சல், இருமல், மற்றும் தொண்டை வலியினால் பாதிக்கப்பட்ட இச்சிறுமி பின்னர் வைத்தியசாலையில் உயிரிழந்தாள் என கம்போடியாவின் தொற்றுநோய் கட்டுப்பாட்டுத் திணைக்களம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் கடந்த பல வருடங்களில் பறவைக் காய்ச்சலினால் இடம்பெற்ற முதல் மனித மரணம் இதுவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலூட்டிகளில் பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து. விழிப்புடன் இருக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.
எனினும், மனிதர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துவதற்கான அச்சுறுத்தல் குறைவானது எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் இம்மாதம் தெரிவித்திருந்தது.
2003 முதல் உலகெங்கும் 450 இற்கும் அதிகமானோர் பறவைக் காய்ச்சலினால் உயிழந்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
2021 இறுதியிலிருந்து ஐரோப்பா பறவைக் காய்ச்சலினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிலும் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளது இதனால், மில்லியன் கணக்கான கோழிகள் உலகெங்கும் கொல்லப்பட்டுள்ளன. உலககெங்கும் பல்லாயிரக்கணக்கான காட்டுப்பறைவகும் இந்த நோயினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM