இந்தியாவும் ஈராக்கும் எண்ணெய் மற்றும் எண்ணெய் அல்லாத துறைகளுக்கு வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பதற்கும் பல்வகைப்படுத்துவதற்கும் அவதானம் செலுத்தியுள்ளது.
அதேவேளை பொருளாதார கூட்டாண்மை மற்றும் தொழில்நுட்ப ஈடுபாட்டை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்துகின்றன.
பாக்தாத்தில் நடந்த இந்தியா, ஈராக் வெளியுறவு அலுவலக ஆலோசனைகளின் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பும் பரந்த அளவிலான பேச்சுக்களை நடத்தியது.
அங்கு இந்திய பிரதிநிதிகள் குழுவினருடன் ஈராக் பிரதிநிதிகளின் துணைச் செயலாளர் ஹிஷாம் அல் அலவி கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.
ஈராக்கின் துணைப் பிரதமரும் எண்ணெய் அமைச்சருமான ஹயான் அப்துல் கானி, ஈராக்கின் வர்த்தக அமைச்சர் அதீர் தாவூத் சல்மான், ஈராக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காசிம் அல் அராஜி மற்றும் ஈராக்கின் சன்னி அவ்காஃப் வாரியத்தின் தலைவர் மெஷான் அல் கஸ்ராஜி ஆகியோர் இந்த இருதரப்பு கலந்துரையாடல்களில் கலந்துகொண்டனர்.
இதன்போது பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பும் நட்பு ரீதியான பாரம்பரிய உறவுகளை குறிப்பிட்டதுடன், அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடுகள், வளர்ச்சி கூட்டாண்மை, உதவித்தொகை திட்டம் மற்றும் திறன் மேம்பாடு, கலாசார உறவுகள் மற்றும் மக்கள் சார்ந்த அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலையை விரிவாக மதிப்பாய்வு செய்தனர்.
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இருதரப்பு ஒத்துழைப்பின் வளர்ச்சியின் எதிர்கால திசை குறித்தும், விரிவான விவாதங்கள் நடைபெற்றதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு வர்த்தகமும் 2021-22 ஆண்டுகளில் 34 பில்லியன் டொலர்களை தாண்டியது. எண்ணெய் மற்றும் எண்ணெய் அல்லாத துறைகளில் வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கவும் பல்வகைப்படுத்துவதற்குமான வழிகளை பற்றி விவாதித்தமை குறித்து இரு தரப்பும் தங்கள் திருப்தியை வெளிப்படுத்தினர்.
பொருளாதார கூட்டாண்மை மற்றும் தொழில்நுட்ப ஈடுபாட்டை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை இந்திய மற்றும் ஈராக் தரப்பு குறிப்பிட்டது.
குறிப்பாக, எண்ணெய், எரிவாயு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, விவசாயம், நீர் மேலாண்மை, மருந்துகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் அவர்கள் வெளிப்படுத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM