சுகாதார அமைச்சின் கீழுள்ள ஊழியர்களின் மேலதிக வேலை நேர கொடுப்பனவை 15 சதவீதத்தினால் குறைக்க தீர்மானம்

Published By: Digital Desk 3

23 Feb, 2023 | 10:25 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள அரச மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் 15 வீதத்தால் குறைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அரச செலவை முகாமைத்துவப்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் கீழ், மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை 15 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்தா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார அமைச்சின் நிறைவேற்று தரத்தில் உள்ள அதிகாரிகளுக்காக மாதமொன்றுக்கு வழங்கப்படும் விடுமுறை கொடுப்பனவு 5 நாட்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய சுகாதார காரியாலயங்கள் ஞாயிறு தினங்களில் மூடப்பட வேண்டுமெனவும், பாதுகாப்பு, சுத்திகரிப்பு போன்றவற்றுக்கான செலவை 10 வீதத்தால் குறைக்கப்பட வேண்டும். இது குறித்து நிறுவன தலைமை அதிகாரிகளுக்கு சுற்று நிரூபம் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேவையற்ற மின்விளக்குகளை அணைத்து, நீர், எரிபொருள், தொலைபேசி, கடதாசிகள் போன்றவற்றின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என்றால் மாத்திரம் சுகாதார அமைச்சின் செயலாளரின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் பெண்கள்...

2024-02-28 17:34:29
news-image

பொதுஜன பெரமுனவை தலைமைத்துவமாக கொண்டு அரசியல்...

2024-02-28 18:39:22
news-image

சம்பள நிர்ணய சபை தொழிலாளர் பிரதிநிதிகளுடன் ...

2024-02-28 18:10:39
news-image

சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் மனிதநேய கூட்டணியை...

2024-02-28 18:03:47
news-image

சந்திரிக்கா, சம்பிக்கவை சந்தித்தார் இந்தியாவின் முன்னாள்...

2024-02-28 17:33:06
news-image

பாதாள உலகக் குழுவினரின் மரண அச்சுறுத்தலால்...

2024-02-28 17:42:48
news-image

குடிநீர் கிடைப்பதில்லை ; லிந்துலையில் மக்கள்...

2024-02-28 17:11:43
news-image

1983 ஆம் ஆண்டு சிறை உடைப்பை...

2024-02-28 17:09:46
news-image

சாந்தன் இந்திய அரசின் வன்மத்திற்கு பலியாகியுள்ளார்...

2024-02-28 17:10:31
news-image

இராணுவத்தால் கையளிக்கப்பட்ட நல்லிணக்கபுர மீள்குடியேற்ற வீட்டுத்திட்ட...

2024-02-28 17:08:30
news-image

இலங்கையில் நீண்டகாலம் மோதலில் ஈடுபட்ட இரண்டு...

2024-02-28 17:05:54
news-image

முசோரியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் இலங்கையின்...

2024-02-28 17:07:39