வீதி கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதல் ; மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 3

23 Feb, 2023 | 10:05 AM
image

வீதி கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த மூவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வீதியில்  நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தொடர்ச்சியாக கடற்கரைப்பள்ளி வீதியை ஊடறுத்து செல்லும் குறுக்கு வீதியில் சில இளைஞர்கள் ஒன்றிணைந்து வீதிப்போக்குவரத்தில் ஈடுபடும் பாதசாரிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வண்ணம் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுவது வழமை. இந்நிலையில் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபடும் நபர்களால் தொடர்ச்சியாக அப்பகுதியில் இடையூறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனை நிறுத்துமாறு அருகில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் கிரிக்கெட் விளையாடியவர்களிடம் தெரிவித்துள்ளார்.இதனால் இங்கு கைலப்பு ஏற்பட்டு கத்தி குத்து  தாக்குதல் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அருகில் இருந்தவர்கள்  குறிப்பிட்டனர். 

இம்மோதலினால் 3 பேர் காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட  பகுதியில் உள்ள வீதிகளில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெறுவதுடன் வீதியில் செல்வோர் அதிகளவில் அசௌகரியங்களுக்குள் உள்ளாவதாக இச்சம்பவத்திற்கு விசாரணைக்காக ஸ்தலத்திற்கு வருகை தந்த பொலிஸாரிடம் பொதுமக்கள் குறிப்பிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11