(ஆர்.யசி )

தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாது ஐக்கிய தேசியக்  கட்சியால் எந்த நகர்வுகளையும் மேற்கொள்ள முடியாது. ஜனநாயக ரீதியில் எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாயினும் அல்லது புதிய அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டுமாயினும் எமது ஆதரவுக்காக காத்திருக்கவேண்டி வருமென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். 

அதியுச்ச அதிகாரங்களை நீக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முயற்சித்துவரும் நிலையில் சிறப்பு அமைச்சு முறைமையை உருவாக்கி அதிகாரங்களை கைப்பற்ற ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களான டிலான் பெரேரா, எஸ்.பி.திசாநாயக போன்றவர்கள் தேசிய அரசாங்கத்தை விட்டுவெளியேற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி விமர்சித்துவரும் நிலையில் அது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.