(குமார் சுகுணா)
சமூக வலைத்தளங்களில் 'ப்ளூ டிக்' பெறும் முறை என்பது மிகவும் பிரபல்யமான ஒன்று. மிக பிரபல்யமானவர்களுக்கு இந்த 'ப்ளு டிக்' முறைமை வழங்கப்படுவது வழமை.
தற்போது இந்த ப்ளூ டிக்கை கட்டணம் செலுத்தி யாரும் பெறமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
உலகின் மிக பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான எலோன் மாஸ்க் ட்விட்டரை வாங்கியவுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்று 'ப்ளூ டிக்' பெற கட்டணம் செலுத்துவது. அந்த வகையில் ட்விட்டர் பயனர் பலரும் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக்கை பெற்று வருகின்றனர்.
தற்போது ட்விட்டரை தொடர்ந்து பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றுக்கும் ப்ளூ டிக் பெற சந்தா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வட்ஸ்-அப் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பெர்க்,
"இனி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் ப்ளூ டிக் பெற வெப் பயனாளர்களுக்கு மாதத்துக்கு 11.99 டொலர் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கட்டணம் செலுத்தும் பயனாளர்களின் சுயவிபரங்கள் அவர்களின் அரசாங்க 'ஐடி'க்கள் மூலமாக சரிபார்க்கப்படும். இது ஃபேஸ்புக் பயனாளர்களின் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
இந்த வாரம் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் மட்டும் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் சமூக வலைத்தளங்களில் கட்டணங்களை செலுத்தி நாமும் 'ப்ளு டிக்' வசதியை பெற்றுக்கொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM