பாசிக்குடாவிற்கு குடும்பத்தாருடன் சுற்றுலா சென்ற கம்பளையைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கெசல்வத்த வீதி கத்துகெட கம்பளையைச் சேர்ந்த எச்.சாந்தகேவா (வயது 42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

கல்குடா பொலிசார் மற்றும் மீனவர்கள் சடலத்தினை தேடும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.இதுவரையு சடலம் கண்டு பிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.