இடிபாடுகளில் மீட்டெடுத்த பூனையை தத்தெடுத்த தீயணைப்பு வீரர்..!

22 Feb, 2023 | 04:04 PM
image

துருக்கி பூகம்ப இடிபாடுகளில் இருந்து 129 மணி நேரத்திற்கு பின்னர் மீட்டெடுத்த பூனை ஒன்றை தீயணைப்பு வீரர் ஒருவர் தத்தெடுத்துள்ளார். இந்த செயலால், உலகெங்கும் உள்ள விலங்குப் பிரியர்களின் உள்ளங்களை அவர் கவர்ந்துள்ளார்.

துருக்கியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் அலி காக்காஸ் (33). இவர், பூகம்ப இடிபாடுகளில் உயிருடன் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, 129 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளில் சிக்கியிருந்த கறுப்பு-வெள்ளை நிறம் கொண்ட பூனை ஒன்றை அவர் மீட்டெடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, அந்த பூனை அவரைப் பின்தொடர்ந்து சென்றது. இரவு முழுவதும் இடிபாடுகளில் உயிருடன் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அலி காக்காஸ் ஈடுபட்டிருந்தபோதும், அந்தப் பூனை அவரைப் பின்தொடர்ந்தது.

இறுதியில், அந்தப் பூனையை அலி காக்காஸ் தத்தெடுத்துக் கொண்டார். அவருடைய செயலை உலகெங்கும் உள்ள விலங்குப் பிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.

“பூனையின் உரிமையாளரை தேட முயன்றேன். ஆனால் எந்த பலனும் இல்லை. பூனையின் உரிமையாளர் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. பூனை என்னை விட்டு ஒரு நொடிகூட விலகுவதில்லை. மீட்கப்பட்டதில் இருந்து அது சோகமாக இருக்கிறது” என்று அலி காக்காஸ் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52