காரைதீவு 09 ஆம் பிரிவில் கண்ணகி கிராமத்தை சேர்ந்த 29 வயது இளம் தாய் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
இரு பிள்ளைகளின் தாயான கே. கமலரூபிணி என்பவரே கணவனுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து தூக்கிட்டு உள்ளார்.
உறவினர்கள், அயலவர்கள் இரவு 8 மணியளவில் அவரை மீட்டு காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது இறந்து விட்டார் என்று வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பிண அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்மாந்துறை நீதிவானின் அறிவுறுத்தலுக்கு அமைய சாய்ந்தமருது பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹீர் மறுநாள் மரண விசாரணை மேற்கொண்டார்.
காரைதீவு பொலிஸ் நிலைய பொலிஸார் சகிதம் இவர் சம்பவ வீட்டுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். கமலரூபிணியின் தாயார், அயல் வீட்டுக்காரர் ஆகியோரின் வாக்குமூலங்களை பதிவு செய்தார்.
இவருடைய அறிவுறுத்தலுக்கு அமைய சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் உடல் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள், உடல் கூற்று பரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் பிரகாரம் தூக்கில் தொங்கியதால் கழுத்து இறுகி ஏற்பட்ட மரணம் என்று மரண விசாரணை அதிகாரி தீர்ப்பு வழங்கி உடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM