இடை நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜெய்காவிடம் பிரதமர் கோரிக்கை

Published By: Digital Desk 5

22 Feb, 2023 | 02:12 PM
image

(எம்.மனோசித்ரா)

நிதி நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள சகல வேலைத்திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (ஜெய்க்கா) பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசியாவிற்கான ஜைக்கா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இதோ தெருயுகியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டவுனேயே தமது வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் பிரதமரிடம் உறுதியளித்தார்.

அரச நிதி நெருக்கடிகள் காரணமாக 2.5 பில்லியன் டொலர் பெறுமதியுடைய ஜைக்கா நிறுவனத்தின் 12 வேலைத்திட்டங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயங்களில் ஜப்பான் முக்கிய பங்கினை வகிக்கின்றது. அந்த வகையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக ஜைக்கா பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

பல்வேறு நகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட நீர் சுத்தீகரிப்பு , கழிவு நீர் கால்வாய், சுகாதாரம் மற்றும் சுத்தீகரிப்பு வேலைத்திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு பிரதமர் ஜைக்கா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் , புகையிரத கடவைகள் உள்ளிட்டவற்றை இலத்திரனியல்மயப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரதமர் இதன் போது கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி தேவையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் திட்டங்களை அமுல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் , ஜைக்கா பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

மேலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடரும் வகையில் வரவு - செலவு திட்ட சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36