(எம்.எம்.சில்வெஸ்டர்)
மொனராகலை மாவட்டத்தின் புத்தல, வெல்லவாய பகுதியில் இன்று முற்பகல் 11.40 மணியளவில் 3.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், எதிர்வரும் சில நாட்களில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் எனவும் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க அளவை பணியகத்தின் சிரேஷ்ட புவியியலாளர் மஹிந்த செனவீரட்ண வீரகேசரிக்கு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
"அண்மையில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதிகளிலே இன்றைய தினமும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக புத்தல மற்றும் வெல்லவாய பகுதிகளின் 5 கிலோ மீற்றர் பரப்புக்கு உட்பட்ட பகுதிகளில் 7 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 வார காலத்தில் 4 ஆவது தடவையாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 10 ஆம் திகதியன்று 3.0 மற்றும் 3.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்ததுடன், கடந்த 11 ஆம் திகதியன்று 2.3 ரிச்டர்அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தன.
இந்த நிலநடுக்கத்தினால் பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் எனவும், நிலநடுக்கம் குறித்து போதிய அவதானத்தையும் நாம் செலுத்தி வருகிறோம். இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்" என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM