(லியோ நிரோஷ தர்ஷன்)

தேர்தலை  நடத்தாமல்  நாட்டையும் மக்களையும் ஏமாற்றும் போக்கில் இருந்து அரசாங்கம் வெளிப்பட வில்லை. ஜனநாயகத்தின் தார்மீகங்களை இழிவுப்படுத்தி நல்லாட்சி செயற்படுகின்றது. ஆகவே ஜனவரியில் இருந்து மக்கள் போராட்டங்கள் தலைநகர் கொழும்பில் வெடிக்கும் என கூட்டு எதிர் கட்சி எச்சரித்துள்ளது. 

மக்கள் போராட்டங்களை ஒடுக்கி ஆட்சி செய்து விட முடியும் என்ற அரசாங்கத்தின் கனவிற்கு 2017 ஆம் ஆண்டு பேரதிர்ச்சியை தரப்போகின்றது. நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்து மக்கள் தலைநகரில் கூடி தொடர் போராட்டங்களை முன்னெடுப்பார்கள் எனவும் கூட்டு எதிர் கட்சி குறிப்பிட்டுள்ளது.

கூட்டு எதிர் கட்சியில் செயற்படும் உள்ளுராட்சி மன்ற தலைவர்களின் சம்மேளனத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து தெளிவுப்படுத்தும் போதே சம்மேளனத்தின் தலைவர் உதேனி அத்துக்கோரல மேற்கண்டவாறு தெரிவித்தார்.